பக்கம்:இளந்தமிழா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கார்த்திகைப்பிறை கண்டதொரு காட்சி கற்பனைக்கு மெட்டுமோதான்? நிலவின் இளங்கீற்று! நான்கண்டேன்! நான்

                   (கண்டேன்! 

உலக மகள் நுதலில் உவமையில்லாப் பட்டமதோ? பைங்கொண்டற் பார்வதியைப் பாகத்தில் வைத்

                   (துப்பின் 

சங்கரனார் தஞ்சடையில் தான் தரித்த தனிக்கலையோ? மதனன் இளவேனில் வருநாளில் தானேந்தப் புதிதாய் அமைந்ததொரு பேரழகுப் போர்வில்லோ? கந்தருவச் சிறுமியர்கள் கருநீலவான் கடலில் உந்திவிளை யாடும் ஒடத்தின் ஒளியுருவோ? கைவளையைத் திருத்துதல் போல் கடைக் கண்ணால் காதலனை மெய்யாகப் பார்த்து வியப்புற்று மெய்சிலிர்த்த நாணத்திடை நடஞ்செய் குறுநகையின் தனிவடிவோ? காணக் கிடைக்காத கார்த்திகைமூன் றாம்பிறையே: கலையொன்று கொண்டே கவின்பெருக்கி நிற்கின்றாய் அலையமுது தான்.பெய்ய அன்றுவந்த பொற்கிண்ணி! என்றெண்ணி நான்நிற்க இளஞ்சிறுமி மின்வளைவு சென்று மறைந்தனளென் சிந்தை திறைகொண்டே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/82&oldid=1359501" இலிருந்து மீள்விக்கப்பட்டது