பக்கம்:இளந்தமிழா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7 பழந்தமிழ் நூல்களால் அறியப்படுவதாகும். அத்தகைய வீரத்தாய் ஒரு கவிதையிலே காட்சி தருகின்ருள். முதுமை சான்ற ஒரு மாது நரம்பெழுந்து உலர்ந்த கையள்நாயகனையும், மைந்தர் நால்வரையும் போர்க்களத்திற் பறி கொடுத்த வீரப்பாவை-தன்நாட்டு மன்னனுகிய பிரதாப சிங்கனைச் சொல்லாலும் செயலாலும் ஊக்குவித்து மானங் காத்த விழுமிய வரலாறு 'கிழவியும் ராணுவும்'என்ற கதைப் பாட்டிலே அழகுற விளக்கப்பட்டுள்ளது.

காதல் புரியும் அரம்பையர்போல் இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடல்லவா இது? அந்த வாக்கை மெய்ப் பிக்கும் வகையில் முல்லை மலர் ஏந்திய ஒரு மெல்லியலாளையும், கருக்கரிவாள் கைக்கொண்டு கழனிக்குச் செல்லும் ஒரு கன்னியையும் கவிதையிலே படமெடுத்துக் காட்டுகின்ருர் ஆசிரியர். இருவரும் கருவமிருக்கும் மங்கைப் பருவத்தார்; எளிமையில் அரிய எழிலுடையார். இவர் வீதியிலே நடந்து செல்லும் அழகினைக் கவிதையிற் கண்டு மகிழ்க.
இவ்வாறு கவிச்சுவை யனைத்தும் இனிதமைந்த இந்நூலை இளந்தமிழ் உலகத்துக்கு உரிமையாக்குவார்போல் இளந் தமிழா என்னும் பெயரால் வெளியிட்டுள்ளார் ஆசிரியர். தன் பழமையும் பெருமையும் அறியாது, ஊக்கமிழந்து உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் இளந்தமிழனத் தட்டி யெழுப்பித் தகைசான்ற நல்லுரை பகர்தலே இந்நூலின் தலையாய நோக்கமாகும்.

"வள்ளுவனும் கம்பனுமே

   வளர்த்த சுவைத் தீங்தமிழின் 
தெள்ளமுதங் கொண்டவன் நீ
   சீர்குலையக் காரணமேன்?"

என்று கேட்கின்றார் கவிஞர். தெள்ளமுதம் வழங்கும் வள்ளுவரையும் கம்பரையும் மறந்ததுதான் காரணம் என்று சொல்லவா வேண்டும்?

        ரா. பி. சேதுப்பிள்ளை
               4-10-49.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/9&oldid=1358715" இலிருந்து மீள்விக்கப்பட்டது