பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 9 மாலதி (மேலும் சிரித்துக்கொண்டு) . இன்னும் சொல்ல வேண்டியதை யெல்லாம் ஒரே அடியாகச் சொல்லி விடுங்கள். பிறகு நான் லேட் செய்வதாக உங்கள் நண்பரிடம் புகார் செய்யக் கூடாது. வாசு : நீ எப்படி வந்தாலும் எனக்கு அழகாகத்தான் தோன்றும். ஆனல், நான் வாங்கி வருகிறதெல்லாம் வீணுகப் பெட்டியில் கிடப்பதா ? மாலதி : எதற்கு இப்படிப் பணத்தைச் சேலையிலும், நகைகளிலும் வாரி இறைக்கிறீர்கள் ? நான் என்ன வாவது கேட்கிறேன என்ன ? வாசு (அன்போடு) ; நீ எதற்குக் கேட்க வேணும் ? எனக்குத் தெரியாதா ? நான் சம்பாதிக்கிற தெல்லாம் எதற்கு ? மாலதி : நீங்கள் ஒன்றுமே வாங்கிக் கொடுக்காது போனலும் உங்களுடைய அன்பை நான் அறியாமற் போகமாட்டேன். சே லை யி லு ம், நகையிலுமா அன்பிருக்கிறது ? வாசு அதற்காக இல்லை மாலதி-ஏதாவது ஒரு அழகான பொருளைக் கண்டால் அதை உனக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு உடனே ஆசை உண்டாகிறது. பிறகு அதை வாங்காமல் என்னுல் இருக்க முடிவதில்லை. மாலதி (சிரித்துக்கொண்டே): குழந்தைகள்தான் இப்படி ஆசைப்படும். வாசு : குழந்தையா ? ஆமாம், நான் குழந்தைதான், நீயும் நானும் குழந்தைகளைப் போலக் களங்க மில்லாமல் ஒருவர்மேல் ஒருவர் அன்போடு சதா இருக்க வேணும். அதுதான் என் ஆசை,