பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் எங்கே ! 97 அனுபல்லவி அழகான தேன் நிலவில் அமுதுறும் ஒசையடி கழலோசை செய்தவனும் கண்ணெதிரே வாரானே (குழ) சரணம் நீல வண்ணக் கண்ணனவன் நெஞ்சை யள்ளும் கள்வனவன் கால வெள்ளம் தாண்டியெங்கும் காதல் பொங்க வாராளுே (குழ) தாமோ ; லலிதா, குழலினுடைய நாதம் பொங் கியதும் என்ன ஏற்படும் என்று உங்களுக்குத் தெரியுமா? லலிதா : குழல் ஒரு அற்புதமான வாத்தியம். அதன் இசையிலே எங்கும் இன்பம் பொங்கும். பாட்டி லேயே அதைப் பாடிவிட்டேனே! தாமோ : இன்பமென்று ம ட் டு ம் சொல்லாதீர்கள் லலிதா. அது வெறும் இன்பமட்டுமல்ல. அது காதலின்பம். பாட்டிலும் அப்படித்தானே பாடி னிர்கள்? கரை காண முடியாத காதலின்பம் அதிலே பிறக்கிறது. நீங்கள் பாடுகின்றபோது அது பொங்கி யெழுந்துவிட்டது. இந்தத் தேன் நிலாவிலே குழைந்து இன்பமளிக்கும் மற்ருெரு பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லலிதா : நீங்களே சொல்லுங்கள். கலைஞராகிய உங்களால் தான் அதை நன்முக வெளிப்படுத்த முடிகிறது. தாமே ; அது அந்தக் காதல்தான். லலிதா உங்களுக்கு இதைவிட வேறு என்ன நான் சொல்ல வேண்டும்? காதல் கொண்ட உள்ளம் பேசத் தடுமாறுகிறது.