பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காதல் எங்கே ! லலிதா (யோசனையோடு) என்ன சொன்னீர்கள், காதலா...? தாமோ : ஆமாம்; அதைச் சொல்லாமல் என்னுல் இனி மேல் தாங்க முடியாது. இந்தத் தேன் நிலவிலே...... லலிதா (திடுக்கிட்டு) : ஆ ..ஹ...ம் - தாமோதரன்! கொஞ்சம் அப்படியே இருந்து பேசுங்கள். நீங்கள் சொல்கிறது எனக்குப் புரியவில்லை. தாமோ : இத்தனை நாட்களாகப் பழகியும் இன்னும் புரியவில்லையா? நான் உங்களுடைய உள்ளத்தை நன்ருகப் புரிந்து கொண்டிருக்கிறேனே? நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? உங்களுடைய உள்ளம் என்னுடைய உள்ளத்தோடு ஒட்டிக் கிடக்கிறதை நான் அறியாதவளு என்ன? லலிதா ; போதும்-பேச்சை நிறுத்துங்கள். உங்கள் பேச்சு வரம்பு கடந்து போகிறது, தாமோ : லலிதா, என் கனவுக் கோயிலிலே நீங்கள்தான் தெய்வம். அந்தக் கோயிலே உடைத்தெறிந்து விடா தீர்கள். என் இதயமே வெடித்துப் போகும். லலிதா (கோபமடைந்து) தாமோதரன், நீங்கள் இவ்வளவு கேவலமான எண்ணமுடையவரென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. நீங்கள் ஒரு அயோக் கியன். உங்களுடன் பழகியதே தப்பு என்று இப்பொழுதுதான் தெரிகிறது. நான் இதோ வீட்டுக்குப் புறப்படுகிறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் நீங்கள் அங்கு வந்து உங்களுடைய பெட்டிகளை யெல்லாம் எடுத்துக்கொண்டு போய் விடுங்கள். இல்லாவிட்டால் போலீசில் பெட்டிகளை ஒப்படைத்துவிடுவேன்.