பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காதல் எங்கே ! சாராய வியாபரம் செய்கிறவர்களைப் பிடிக்கிற தனிப் பட்ட பணியில் நான் இருக்கிறேன். சதாசிவம் : சந்தோஷம்-ஆளுல்...இங்கே... இன்ஸ்பெக்டர் : உங்கள் மனைவியின் பெயர்தானே லலிதா என்பது? சதாசிவம் : ஆமாம்-அதற்கென்ன? இன்ஸ்பெக்டர் : அவர்கள் ஏதோ ஒரு ஒவியனுக்கு இங்கே சாமான்களையெல்லாம் வைத்துக்கொள்ள இடம் கொடுத்திருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். சதாசிவம் : ஒஹோ, அப்படியா விஷயம்? அந்த ஒவியர் ஏதோ வர்ணப் பெட்டிகளே யெல்லாம் வைத்துக் கொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்று என்னைத் தான் கேட்டார். நான்தான் அவருக்கு இடம் கொடுத்தேன். என் மனைவிக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இன்ஸ்பெக்டர் : அவன் வர்ணப் பெட்டிகளென்று சொல்லிக் கொண்டு கள்ளச் சாராயம் வைப்பதற்கு நல்ல இடம் கண்டுபிடித்திருக்கிருன். உங்களை ஏமாற்றியிருக்கிருன். (லலிதா வருகிருள்.} சதாசிவம் : இதோ, என் மனைவியும் வந்துவிட்டாள். வா லலிதா, டி. பார்ட்டி முடிந்ததா? லலிதா (கலவரத்தோடு) . ஆமாம், இவர் யார்? எதற் காக வந்திருக்கிருர்? இன்ஸ்பெக்டர்: அம்மா, உங்களிடம் ஒரு விஷயம் விசாரிக்க வேண்டும் என்று...