பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 காதல் எங்கே ! லலிதா : அப்படியா? ஐயோ நான் எத்தனை முட்டாளாக இருந்துவிட்டேன்? இன்ஸ்பெக்டர் : அம்மா, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை நான் நன்ருக அறிவேன். மிஸ்டர் சதாசிவம் அவர்களைப் ப ற் றி யு ம் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன். அவரைப்போல நல்லவர் இருப்பது அருமை என்று பலபேர் சொல்வியிருக்கிரு.ர்கள். அதனல் உங்களை இதில் சம்பந்தப்படுத்தாமல், தாமோதரனைக் கைது செய்யவே எண்ணியிருக்கிறேன். அதற்குத்தான் வழி காண வேண்டும். லலிதா : அவன் அயோக்கியன் என்று எனக்குத் தெரிந் ததும் அவனை இப்பொழுதே வந்து அந்தப் பெட்டிகளை யெல்லாம் எடுத்துக்கொண்டு போய் விடும்படி சொல்லியிருக்கிறேன். அவன் இங்கே சற்று நேரத்தில் வருவான். இன்ஸ்பெக்ட்ர் : வருவானென்று என்ன நிச்சயம்? லலிதா : வராவிட்டால் போலீசில் பெட்டிகளை ஒப்பு விப்பேனென்று சொன்னேன். அதைக் கேட்டு அவன் கொஞ்சம் பயந்து போனன். அதன் காரணம் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது. இன்ஸ்பெக்டர் : போலீசைப்பற்றிச் சொன்னிர்களா ? அப்போ அவன் நிச்சயமாக வருவான். அவன் வந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டு போகும்போது நான் அவனை வீதியிலே கைது செய்து கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். சதாசிவம் : அப்படி ஏதாவது வேண்டுமானலும் நான் பொறுப்பேற்றுக்கொள்ளுகிறேன். என் மனைவி...