பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 103 இன்ஸ்பெக்டர் : மிஸ்டர் சதாசிவம், நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் போய் வருகிறேன். உங்களுக்கு யாதொரு தொந்தரவும் வராது. Iபோகிருன், பானுமதி நுழைகிருள்.) சதாசிவம் : யார், பானுமதியா, வாம்மா? ஏது இந் நேரத்தில் இப்படி அவசரமாக வருகிருய்? பானுமதி : லலிதாதான் அவசரமாகக் காரை அனுப்பி யிருந்தாள். ஆமாம், எதுக்கு இன்ஸ்பெக்டர் வந்து விட்டுப் போகிருர்? லலிதா : எல்லாம் நான் செய்த குற்றம்தான் பானு. உன் அண்ணுவைப்பற்றிச் சரியாக அறிந்து கொள்ளாத பாவி நான். (விம்முகிருள்.) சதாசிவம் : இப்பத்தான் நன்ருகத் தெரிந்துகொண் டாயே. இனி எதற்கு வருத்தப்படுகிருய்? பானுமதி : என்னண்ணு? எனக்கு ஒன்றும் புரியவில்லையே? சதாசிவம் : இனிமேல் ஒன்றும் புரியவே வேண்டியதில்லை. பானு, வா, அப்புறம் சாவகாசமாகப் பேசுவோம். இந்த நாடகம் முடிகிறதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். அப்புறம் தமாஷாகப் பேசுவோம். அதோ...... கார் வந்து நிற்கிற சப்தமும் கேட்கிறது. பானு, இப்படி வா-நாம் இரண்டு பேரும் அந்தப் பக்கமாகக் கொஞ்ச நேரம் போவோம். (இருவரும் உள் அறைக்குச் செல்கிருர்கள். தாமோ தரன் உள்ளே நுழைகிருன் , ( திரை )