பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 குற்றவாளி மாலதி : எனக்கு மாத்திரம் வேறென்ன ஆசை ? உங்களுக்கு மனைவியாக ஏற்பட்டதே என்னுடைய பெரிய பாக்கியம்-ஆமாம், அந்தப் பத்தாயிரம் ரூபாயைப் பாங்கியில் போடாமல் எதற்காக அப்படியே வைத்திருக்கிறீர்கள் ? வேலைக்காரன் (உள்ளே நுழைந்துகொண்டே) : ஸார்... வாசு : அந்த வைரத் தோடு, வைர அட்டிகை எல்லாம் நாளைக்கே வாங்கி விடலாம். மாலதி : அதெல்லாம் ஒன்றுமே வேண்டாம்-இருக் கிறதே போதும். பணத்தைப் பாங்கியிலே போட்டு விடுங்கள். வேலை : ஸார்......... வாசு : என்ன முனியா ? என்ன விஷயம் ? வேலை : யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்காரு உடனே பார்க்கணுமாம். வாசு : யாரது ? இப்பொழுது யாரையும் நான் எதிர் பார்க்கவில்லையே ! மாலதி : வைாத்திலே சும்மா காசைப் போடாதீர்கள். பாங்கியில போட்டாலும் வட்டி வரும். (இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே ராகவன் உள்ளே நுழைகிருன். எடுப்பான தோற்றமும், கூர்ந்த பார்வையும் உடையவன் அவன்.) ராகவன் : தாங்கள்தானே வாசுதேவன் ? வாசு : ஆமாம்-நீங்கள் யார் ? ராகவன் : உங்களிடம் தனியாக ஒரு முக்கியமான விஷயம் பேசவேணும்.