பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 இளந்துறவி சுப்பிர : ஏன், சிறு வயதிலேயே துறவு பூண்டவர்கள் உலகத்தில் இல்லையா? ராம : போதும் போதும். இனி விவேகானந்தரைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் பிரசங்கம் ஆரம் பித்து விடுவாய். கேட்டுக் கேட்டு சலித்துவிட்டதே. சுப்பிர : பின் ஏன் மறுபடியும் இதே பேச்சைக் கிளப்பு கிருய்? ராம : சுப்பிரமணியம், உன்னேடு வாதாட என்னல் முடியாது. ஏதோ உன்மேல் உள்ள பிரியத்தினலே... சுப்பிர பிரியத்தினலேதான் நான் எங்கு போனலும் அங்கே வந்து தொந்தரவு கொடுக்கிருய். ராம : அப்படியானல் நான் வராமல் இருந்துவிடுகிறேன். சுப்பிர (தணிந்த குரலில்) : ராமநாதா, உன்னை வர வேண்டாமென்று சொல்வேன, இந்த உலகத்திலே எனக்கு இரண்டு பற்றுக்கள்தான் உண்டு. ஒன்று நீ மற்ருென்று சங்கீதம். ராம : இன்னுமொன்று இருக்கிறதே. சுப்பிர : இல்லவே இல்லை. ராம : அந்தச் சிறு பெண்? சுப்பிர (சிரிப்புடன்) : லக்ஷ்மியா, போடா அசடு. அவளிடம் எனக்குப் பற்றுதல் ஒன்றும் கிடையாது. அவளுக்குப் நல்ல பாட்டுச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அவ்வளவுதான். ராம : சரி, உன்னுடைய பாடல்கள் ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்கிருயா? அதைக் கொஞ்சம் பாடு கேட்கிறேன். லக்ஷ்மிக்குக் கிடைத்த பாக்யம் எனக்கும் கிடைக்கட்டும்,