பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 117 சுப்பிர: டேய், இப்படியே பேசி காப்பிகிடைக்கிற நேரம் பார்க்கிருயா ? எழுந்து புறப்படடா. இன்றைக்கு ஒரு புதிய வீதி வழியாக உன்னைக் கூட்டிச் செல்லுகிறேன். ராம (எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டே) சரி, என்ன சொன்னலும் நீ விட்டபாடில்லை. ஏண்டா, ஆற்றங்கரையிலேயே நல்ல காப்பி கிடைக்குமா ? சுப்பிர : உனக்குத் தெரியாதா, இங்கே ஆற்றிலே காப்பி தான் சூடாக வருகிறது. முழுகி வேண்டிய மட்டும் குடிக்கலாம் வா. ராம : அடடே, துறவியாகியும் இன்னும் கொஞ்சங் கொஞ்சம் ஹாஸ்யம் இருக்கிறதே. துறவிக்கு அதெல்லாம் கூடாதப்பா. வேடிக்கையாகப் பேசு கிறவனைக் கண்டால் யாரும் காலில் விழ மாட்டார்கள். யாருக்கும் புரியாதவாறு வேதாந்தம் பேசவேணும். அதுதான் உனது வேஷத்திற்கு அழகு! சுப்பிர : குருநாதா, இனிமேல் அப்படியே செய்கிறேன், இப்பொழுது புறப்படுங்கள். (சிரித்துக்கொண்டே இருவரும் புறப்படுகிருர்கள்.1 காட்சி நான்கு (பேரூரிலே ஒரு வீதி, வெளிச்சம் நன்கு வராத காலை நேரம், சுப்பிரமணியமும் ராமநாதனும் பேசிக் கொண்டே செல்கிரு.ர்கள்.) ராம : ஆறு எந்தப் பக்கம் ? சுப்பிர : வா, இப்படியே இந்த வீதியில் நடப்போம். இப்படித்தான் போகவேனும். இந்த வீதி வழியாக 8