பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 இளந்துறவி நான் இதுவரை சென்றதேயில்லை. ஆனால், எந்த வீதியில் போனுலும் ஆற்றுக்குப் போய்ச் சேரலாம். நீ சொன்னது போலவே புதிய வீதியிலே இன் றைக்குப் போகலாம். ராம : சுப்ரமணியம், ஒரு விஷயம் சொல்லுகிறேன், கோபித்துக்கொள்ளாதே. இது வேடிக்கையல்ல, முக்கியமான விஷயம். உன்னோடு ஒருநாள் முழுதும் இருந்தேனே'ஒன்றும் வித்யாசம்ே தெரியவில்லையே? சுப்பிர : என்ன வித்தியாசம் ? நாம் இரண்டு பேரும் பால்ய சிநேகிதர்கள். விளையாடுவோம். சண்டை போடுவோம்; பிறகு சேர்ந்து கொள்வோம். இதிலே என்ன வித்தியாசம் ? ராம : நான் அதைச் சொல்லவில்லை. துறவியாகி விட்டாயே மாறுதல் ஒன்றும் காளுேமே, பழைய படிதானே இருக்கிருய் ? சுப்பிர பழையபடி இருக்காமல் பிறகு என்ன மாறுதல் வேண்டுமென்கிருய் ? காஷாயம் போட்டுக்கொண் டிருக்கிறேன் ; அது மாறுதல் இல்லையா? ராம : காஷாயம் எல்லாம் நன்ருகத்தான் இருக்கிறது. சுப்பிர : பின்னே என்ன வேணும் ? பெரிய சுவாமிகள் என்று தடபுடல் செய்ய வேனுமா ? ஆஷாடபூதி போல் நடிக்க வேணுமா ? ராம ; அதில்லை. எனக்கென்னவோ நீ பழைய சுப்பிர மணியமாகத்தான்...... |பாட்டு ஒலி லேசாகக் கேட்கிறது.1 சுப்பிர சரிசரி, வளேத்து வளைத்து ஒரே விஷயத்தைப் பேச வராதே. பால்ய சிநேகளுன உனக்கு வித்யாசம்