பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இளந்துறவி ராம (பாட்டு முடிந்த பிறகு). அடடா! என்ன சுகமான சாரீரம். பாட்டும் ரொம்ப நல்ல பாட்டு. பாடுகிற பெண்தானே லக்ஷ்மி ? சுப்பிர (யோசன்ையோடு) , லக்ஷ்மியினுடைய குரல் இல்லையே இது. ராம : லக்ஷ்மி குரல் அல்ல என்று எப்படி நிச்சயமாகத் தெரியும் ? சுப்பிர லக்ஷ்மியின் குரலவிட இதில் குழைவும் கனிவும் அதிகம். யாரோ பாட்டின் பொருளே உணர்ந்து உள்ள நெகிழ்வோடல்லவா பாடுகிருர்கள் ? ராம : இது யார் வீடு ? சுப்பிர எனக்கென்ன தெரியும்? ஒவ்வொரு விடும் இன்ன ருடையதென்று தெரிந்து கொள்வதுதான் என் வேலையா ? ராம (சிரித்து) . ஒகோ...நீ துறவியல்லவா ? மறந்து போய்விட்டேன். சுப்பிர (பாட்டை முணுமுணுக்கிருன்) : வழிகாட்டுவாய் அருட்பெருஞ்சேர்தி... ராம : நான் சொல்வது உன் காதில் படவில்லையா ? சுப்பிர : ராமநாதா ஆற்றில் இறங்கிப் பிறகு இந்தப் பாட்டைப் பாடுவது பொருத்தமாக இருக்கும். ராம : இங்கேகூட இந்த வீட்டுக்கு வழி தெரிந்தால் நன்ருகத்தான் இருக்கும். இதுவும் வீடுதானே ? சுப்பிர : அந்தப் பெண் பாடியது எனக்கு ரொம்பப் பிடிக்கிறது.