பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 121 ராம : யாராவது கொஞ்சம் நன்ருகப் பாடிவிட்டால் போதும், உனக்கு மனம் அங்கேயே இருக்கும். சுப்பிர : அந்த இசை என் உள்ளத்திலே இன்ப அலையாக மிதந்துகொண்டிருக்கிறது. (தானே பாடுகிருன்). வழி காட்டுவாய்...(பல்லவி பாடி...ஸ்வரம் பாடு கிருன்...அதை நிறுத்தித் தனக்குள்ளேயே) அந்தப் பெண்ணிற்கு ஸ்வரம் பாடவும் சொல்லிக் கொடுத் தால் நன்ருக இருக்கும். (கோயில் மணியோசைபாட்டை நிறுத்தி) ராமநாதா, காலை பூஜைக்கு நேரமாகிவிட்டது வா, சீக்கிரம். அவள் பாடிய பாட்டிலே உயிர் இருக்கிறது... ராம : நாம் போவதற்குள் பூஜை முடிந்துவிடாதே ? சுப்பிர : ஆமாம், இன்று பூஜைக்குப் போய்ச் சேர முடியாது போலிருக்கிறது. இதுவரை ஒருநாள்கூட நான் காலப் பூஜைக்குத் தவறியதில்லை.பாட்டு நன்ருக இருக்கிறது. ராம : பேரூர்க் கோயிலிலுள்ள சிற்பங்கள் மிக அழகாக இருக்குமாமே, பார்க்கலாமா ? சுப்பிர : நீ வேண்டுமானுல் பார்த்துவிட்டு வா...நான் லக்ஷமிக்குப் புதிய பாட்டு ஒன்று சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு நல்ல பாட்டு எழுதப் போகிறேன். ராம : அப்படியானல் நீ குளித்த பிறகு கோயிலுக்கு வரவில்லையா ? சுப்பிர வருகிறேன். வந்து இறைவனுக்கு வணக்கம் .ெ ச லு த் தி வி ட் டு உடனே சத்திரத்திற்குப் போகிறேன். நீ மெதுவாகச் சிற்பங்களையெல்லாம்