பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இளந்துறவி சுப்பிர சரி லக்ஷ்மி, அந்தப் புதியப் பாட்டுப் பாடமாகி விட்டதா ? லகஷ்மி : பாடம் செய்துவிட்டேனே, சுப்பிர : எங்கே பாடு பார்க்கலாம். இப்படி உட்கார்ந்து பாடு. லகஷ்மி (அமர்ந்து பாடுகிருள்) : பல்லவி உண்மை தவருதே-அதில் ஊக்கம் குறையாதே (உண்மை) அனுபல்லவி கண்ணையிமைபோல-வாய்மை காப்பதுனக் கழகாம் பெண்ணையும் விற்றடிமை-செய்தே பேணின நல்லறமாம் (உண்மை) சரணம் துன்பம் தொடர்ந்தாலும்-தாங்கொணுச் சோதனை சூழ்ந்தாலும் இன்பம் மறைந்தாலும்-இகழ்ச்சியோ டேளனம் சேர்ந்தாலும் (உண்மை) உண்மை கடைப்பிடிக்கும்-வாழ்வே உன்னத வாழ்வாகும் திண்மையும் ஆண்மையுமாய்-உயிர்தான் தேயினும் காத்திடுவாய் (உண்மை) சுப்பிர : நன்ருகப் பாடம் செய்திருக்கிருய். நாளைக்குப் புதியப்பாட்டுச் சொல்லித் தருகிறேன். இப்பொழுது