பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 இளந்துறவி சுப்பிர : எந்தப் பெண்ணடா? எப்பொழுது பார்த் தாலும் உனக்கு இந்தப் பேச்சுத்தான? வந்தவுடனே ஆரம்பித்துவிட்டாய். ராம : அப்பா, சள்ளென்று விழுகிருயே? நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்லவில்லையே. போன தடவை இங்கே நான் வந்திருந்த போது காலையிலே ஆற்றுக்குப் போளுேமே அப்போ யாரோ ஒரு பெண் உன்னுடைய பாட்டைப் பாடிக்கொண் டிருந்தாளே அவளைப் பற்றித்தான் கேட்கிறேன். சுப்பிர : அவள் பாடுவது மிக இனிமையாக இருக்கிற தல்லவா? ராம : அதல்ைதான் கேட்டேன். சுப்பிர : இப்பொழுதெல்லாம் ஆற்றுக்கு அந்த வீதி வழியாகவே போகிறேன். தினமும் அவள் பாட்டுக் கேட்கிறது. ராம ; அவளே நீ பார்த்திருக்கிருயா? சுப்பிர இல்லே, பார்த்ததேயில்லை. அவள் வெளியே தலை நீட்டுவதாகவே காணுேம். ராம : அவள் பெயராவது தெரியுமா? சுப்பிர : அதுவும் தெரியாது. ராம : சரிசரி, துறவிக்கு அதெல்லாம் எதற்கு என்று நினைத்திருப்பாய். சுப்பிர இல்லை-எனக்குக்கூடத் தெரிந்துகொள்ளலா மென்ற இஷ்டந்தான். ஆனல் யாரிடம் கேட்பது?