பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இளந்துறவி 127 ராம : ஏன், லக்ஷ்மியைக் கேட்டால் சொல்லுகிருள். அவள் மூலந்தானே உன்னுடைய பாட்டுக்களை அவள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்? சுப்பிர: லக்ஷ்மியிடம் நான் எதையுமே கேட்பதில்லே என்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறேன். ராம : ஏனே? சுப்பிர : உலக விஷயமெல்லாம் எனக்கு எதற்கு என்று தான். மேலும் லக்ஷமி ஏதாவது தப்பாக... ராம : பெயரைக் கேட்டால்கூட ஆகாதோ? பிறகு எதற்காகத் தினமும் அவள் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிருய்? அந்த வீதி வழியாக எதற்குப் போகிருய்? சுப்பிர பாட்டைக் கேட்பதில் என்ன தவறு? ராம : பெயரைக் கேட்டால் என்ன வந்து விட்டதாம்? சுப்பிர : என்னமோ என் பாட்டுகள் அல்லவா? அதுவும் அவள் பாடும் முறை என்னைக் கவர்ந்திருக்கிறது. என்னுல் அவள் பாடுவதைக் கேட்காமலிருக்க முடிய வில்லை. இதில் என்ன தப்பு? ராம : லக்ஷ்மி தினமும் வருகிருளா? சுப்பிர ஏன் தினமும் வராமலென்ன? இதோ இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவாள்; வா உள்ளே போவோம். ராம : நான் இருந்தால் இடைஞ்சலாக இருக்குமே? (உள்ளே போகிருர்கள்.)