பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i2. குற்றவாளி ராகவன் (மேலும் நிதானமாக) . நீங்கள்தான் அதற்குக் காரணம். அது எனக்குத் தெரியுமென்று உங்களிடம் சொல்லிக்கொள்ளவே நான் வந்தேன். வாசு (ஆத்திரத்தோடு : இது சுத்தப் பொய்-நீ யார் ? ராகவன் : ஆத்திரப்படாதீர்கள்-நீங்கள் சுட்டுக் கொன் றதை நிரூபிக்க என்னல் முடியும். வாசு : நான் சுடவும் இல்லை. உன்னல் அதை நிரூபிக் கவும் முடியாது. எனக்கும் அவளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. ராகவன் : நீங்கள் இன்று மாலை நான்கு மணிக்கு ஆபீஸ் முடிந்ததும் சரோஜினி வீட்டிற்குப் போயிருக் கிறீர்கள். வாசு (ஆத்திரமாக): நீ அதை எப்படி நிரூபிக்க முடியும்’ நான் அதை மறுக்கிறேன். ராகவன் : இன்று நான்கு மணிக்கு ஆபீஸ் முடிந்ததும் அங்கு வருவதாக நீங்கள் சரோஜினிக்கு எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது. வாசு : நான் அங்கு போயிருந்தாலும் நானே அவளைச் சுட்டுக் கொன்றதாகக் கூறுவது பொய். கொலை என்கிற எண்ணமே என் உள்ளத்தில் எந்தக் காலத் திலும் தோன்ருது. ராகவன் : உங்களுடைய கைத் துப்பாக்கி அங்கே இருந்தது. வாசு (திடுக்கிட்டு) . அது உனக்கு எப்படித் தெரியும் ? ராகவன் : நானே என் கண்ணுல் பார்த்தேன். வாசு . சரோஜினி வீட்டிலிருந்து இங்கே வருகிற அவசரத்திலே தோல் கைப்பெட்டியை அங்கேயே