பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இளந்துறவி 129 லசஷ்மி : என் அக்காதான் பாடுகிருள். சுப்பிர (ஆச்சரியத்துடன்) ; உன் அக்காவா? என்னு டைய பாட்டை அவளா...? லகஷ்மி : ஆமாம், என் அக்காதான் பாடுகிருள். நான் பாடுவதைக் கேட்டு அவள் கற்றுக்கொண் டிருக்கிருள். சுப்பிர ! உங்கள் வீடுதான அது? லகஷ்மி; ஏன். அதுதான் எங்கள் வீடு, நானும் அக்காவும் அப்பாவும் குடியிருக்கிருேம். நீங்கள் தினமும் காலையிலே எங்கள் வீதி வழியாகத்தானே போகிறீர்கள்? சுப்பிர : உன் அக்காவா பாடுவது? மிக அற்புதமாக இருக்கிறது. லசுஷ்மி : எங்கள் வீட்டுக்கு வரும்படி வேண்டினுேம் ; நீங்கள்தான் அந்தப் பேச்சே எடுக்கக்கூடாது என்று உத்திரவு போட்டுவிட்டீர்களே. சுப்பிர (தடுமாற்றத்தோடு) அதற்கென்ன ஒரு சமயம் வந்தால் போகிறது. லகஷ்மி : நான் இனிமேல் உங்களை வரும்படி கேட்கவே மாட்டேன். பிறகு என்மீது கோபம் கொள்வீர்கள். சுப்பிர இல்லை, இல்லை. கோபம் என்ன இருக்கிறது? உன் அக்கா பெயர் என்ன லகஷ்மி? லசுஷ்மி : அவள் பேர் கமலா? சுப்பிர : கமலா வெளியிலேயே வருவதில்லையா?