பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இளந்து ரவி லசன்.பி : அவள் வெளியிலே வரமாட்டாள். வீட்டை விட்டு எங்குமே போக மாட்டாள். நீங்கள் வீதியில் வருகிறபோது பாடிக்கொண்டே மறைவிலிருந்து பார்ப்பாள். உங்கள்மீது அவளுக்கு ரொம்ப பக்தி: உங்களைப் பற்றிச் சொன்னுல் கையெடுத்துக் கும்பிடுவாள். சுப்பிர : உங்கள் வீட்டிலே யார் யார் இருக்கிறதாகச் சொன்னுய்? லகஷ்மி : நானும் அக்காளும், அப்பாவுந்தான். அம்மா இறந்துபோய் ரொம்ப வருஷம் ஆகிறது. இன்றைக்கு நான் சீக்கிரமாகப் போகவேனும். சுப்பிர : ஒ. பேச்சிலே மறந்துவிட்டேன? நான் முதலிலே பாடுகிறேன். பிறகு நீயும் சேர்ந்து பாடலாம்... இந்தப் பாட்டையும் கமலா பாடுவாளா? லகஷ்மி : நிச்சயம் பாடுவாள். உங்கள் பாட்டைப் பொருள் தெரிந்து அவள்தான் பாடுவாள். சுப்பிர பாட்டிலே அவளுக்கு அவ்வளவு ஆசையா? லகஷ்மி : முன்னுலெல்லாம் அவள் பாடுவதையே நிறுத்தி விட்டாள். உங்கள் பாட்டைக் கேட்ட பிறகுதான் அவள் மறுபடியும் அத்தனே ஆசையோடு பாடுகிருள். சுப்பிர அவளே இங்கு வந்து கற்றுக் கொண்டால் இன்னும் நன்முக இருக்கும். லகஷ்மி நான்கூடச் சொன்னேன்; ஆனல் அவள் வெளி யிலே வருகிறதே இல்லை. அவள் வெளியில் தலை காட்டி ரொம்ப நாள் ஆகிறது...இன்றைக்குப் பாடம் வேண்டாம் சுவாமி-எனக்கு நேரம்...