பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இனத்துறவி ராம : சமூகமே வேண்டாமென்று துறந்துவிட்ட சுவாமி களுக்கு அதைப்பற்றி எல்லாம் என்ன கவலே ? சுப்பிர : ராமநாதா, விளையாட்டெல்லாம் வேண்டாம். நான் ஒரு விஷயம் கேட்கிறேன். விதவா விவாகம் செய்துகொள்வது பற்றி உன்னுடைய கருத் தென்ன ? ராம ; அதைத்தானே நான் வற்புறுத்திக்கொண்டு வருகிறேன். விதவா விவாகம், கலப்பு மணம் இவற்றையே ஒவ்வொரு இளைஞனும் மேற்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம். சுப்பிர : சீர்த்திருத்தம் என்பதற்காகவே அப்படிச் செய்ய லாமா ? மனப் பொருத்தம் இருக்கவேண்டாமா ? ராம : அதுவும் கூட இருந்துவிட்டால் ரொம்ப விசேஷம் தான். ஆமாம். இப்பொழுது இந்தக் கேள்வி யெல்லாம் எதற்கு ? லக்ஷ்மியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிருயா என்ன ? அவள் விதவை யில்லேயே ? சுப்பிர : போடா, லக்ஷ்மி, லக்ஷ்மி-உனக்கு அவளைப் பற்றித்தான் பேச்சு. ராம உனக்கேன் அவளேப்பற்றிப் பேச்செடுத்தால் கோபம் வந்துவிடுகிறது ? கேலி, தமாஷ் என்ப தெல்லாவற்றையும் துறந்துவிட்டாயோ ? அல்லது உங்களுக்குள்ளே தடுமாற்றமா? தாபமா அல்லது...? சுப்பிர : ராமநாத், கேலிக்குச் சந்தர்ப்பம் இல்லையா ? எப்போதும் கேலிதான ? ராம : இப்பொழுது சந்தர்ப்பம் என்ன தவறிவிட்டது ? சரி-கேலியெல்லாம் வேண்டாம். நான் என்