பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 13 வைத்துவிட்டு வந்துவிட்டேன். இப்பொழுதுதான் அது நினைவுக்கு வருகிறது. அதிலே என் கைத் துப்பாக்கி இருந்தது. ராகவன் : நீங்கள் கொலை செய்ததை நிரூபிக்க அது நல்ல சாட்சியாக இருக்கிறது. அந்தத் துப்பாக்கியாலேயே அவள் இறந்திருக்கிருள், வாசு (பதற்றத்தோடு) . நான் அவள் வீட்டிற்கு வந்ததை யாரும் நிரூபிக்க முடியாது. நான் எழுதிய கடிதமிருந்தாலும் நான் வந்ததை நிரூபிக்க அது மட்டும் போதாது. கடிதம் எழுதிவிட்டு வராமலும் இருக்கலாமல்லவா ? ராகவன் : உங்கள் கடிதம் மட்டும் போதாதென்ருல் நீங்கள் வந்ததை வேலைக்காரி பார்த்திருக்கிருள். அவளும் மற்ருெரு சாட்சி. உங்கள் தோற்பையும் நல்ல சாட்சியாக இருக்கிறது. வாசு (கோபமாக) : நான் அங்கு வந்திருந்தாலும் நானே கொலை செய்ததாக எப்படிக் கூற முடியும் ? நான் அங்கிருந்து புறப்பட்ட பிறகு அங்கு வேறு யாராவது வந்து அங்கே என் பையிலிருந்த என்னுடைய துப்பாக்கியை எடுத்து அவளேச் சுட்டிருக்கக் கூடாதா ? அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ராகவன் (நிதானமாகவும் அழுத்தமாகவும்) : இப்படி யெல்லாம் சொல்லி நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அங்கு வந்து போன பிறகு அரைமணி நேரங்கூட ஆகவில்லை. அந்த நேரத்தில் அங்கே யாரும் வரவில்லை என்பதற்கு வேலைக்காரியே சாட்சி. நானும் அதை ஊர்ச்சிதம் செய்ய முடியும். நீங்கள்