பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இளந்துறவி லகழ்மி : ஆமாம், சுவாமி. நான் போய் வருகிறேன். சுப்பிர ராமநாதனுக்கு உன் பாட்டைக் கேட்க வேணு மாம். வாடா, ஏன் இவ்வளவு நேரம் ? ராம (உள்ளே நுழைந்து கொண்டே) : அ ப் ப ா, எத்தனை பேரை வசியம் பண்ணி வைத்திருக்கிருய் ? இந்தக் காவித் துணிக்கு உள்ள மதிப்பே மதிப்படா. சுப்பிர என்னடா அது ? நான் கேட்டதை விட்டுவிட்டு என்னவோ மதிப்புப் போடுகிருயே ? ராம : கோயிலிலே ஒரே வாக்குவாதம். நீ ரொம்ப நாளேக்கு இப்படிக் காவி போட்டுக்கொண்டு திரிய மாட்டாய் என்று நான் தமாஷாகச் சொல்லி வைத் தேன். எல்லோரும் என்மேலே ஒரே பாய்ச்சல் : அடிக்குத் தப்பித்து ஓடி வந்துவிட்டேன். சுப்பிர : யாரடா அவர்கள்? ராம : எல்லாம் உன்னுடைய அடியார்கள்தான். உன் னுடைய துறவைப்பற்றி அவர்கள் அத்தனை பெருமையாகப் பேசிக் கொண்டார்கள். சுப்பிர : அதிருக்கட்டும். இப்போ லக்ஷ்மியின் பாட்டைக் கேட்கலாமா ? ராம : முதலில் அதோ வெளியிலே நிற்கும் அவர்களுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வா. நான் உன்னுடைய பாலிய சிநேகிதன், தமாஷாகத்தான் பேசினேன் என்று என்ன சொன்னுலும் அவர்கள் நம்பவில்லை. நீயே சொல்ல வேணுமாம். இல்லாவிட்டால் நான் இந்த ஊரைவிட்டு உடம்போடு போக முடியாது. சுப்பிர (சிரித்துக்கொண்டே): நீயும் கூடவா லக்ஷ்மி, இந்த வேடிக்கையைப் பார்த்துவிட்டுப் பிறகு பாடலாம். (மூவரும் வெளியே போகிருர்கள்.)