பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இளந்துறவி லகஷ்மி : வெளியூர் போயிருக்கிருர்-வர இன்னும் இரண்டு நாள் செல்லும். சுப்பிர (திடீரென்று) . லக்ஷ்மி, நான் உங்கள் வீட்டிற்கு வரட்டுமா? லகஷ்மி : நீங்களே வருவதானுல் எனக்குச் சந்தோஷம் தான். அக்காவும் நீங்கள் வீட்டிற்கு வரவேண்டு மென்று ஆவலோடிருக்கிருள். சுப்பிர : அப்படியா? சரி அவளிடம் சொல்லு. நான் பதினுேரு மணிக்கு வருகிறேன். லக்ஷ்மி : இப்பொழுதே வாருங்கள், நான் அழைத்துச் செல்லுகிறேன். பதினெரு மணியென்ருல் நான் பள்ளிக்கூடம் போய்விடுவேன். சுப்பிர : இல்லை, இப்பொழுது நீ போய்க் கமலாவிடம் சொல்லு! நான் பின்னல் வருகிறேன். இப்போ கொஞ்சம் வேலையிருக்கிறது. லகஷ்மி . சரி, சுவாமி. நான் இல்லாவிட்டால் பரவா யில்லை. நான்தான் தினமும் உங்களைப் பார்க் கிறேனே. |போகிருள்.)