பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி நான்கு (கமலா இருக்கும் வீட்டில் முன் அறை. கமலா எதிர்பார்த்து நின்றிருக்கிருள். சுப்பிரமணியம் உள்ளே நுழைகிருன். காலே பதினெரு மணி.) சுப்பிர : கமலா...... கமலா : சுவாமி, அடியாள் மிகவும் பாக்கியசாலி. இப்படி இந்த ஆசனத்தில் அமருங்கள். அப்பா இன்று ஊரிலிருந்தால் மிகவும் சந்தோஷப்படுவார். (வணங்கி நிற்கிருள்.: சுப்பிர : எங்கே லக்ஷ்மி ? கமலா : அவள் பள்ளிக்கூடம் சென்று விட்டாள். தாங்கள் வரும்போது இருக்க முடியவில்லையே என்று அவள் வருத்தத்தோடு சென்றிருக்கிருள். சுப்பிர : நீ பாடுவதைக் கேட்டுக் கேட்டு அளவிலா மகிழ்ச்சி யடைந்திருக்கிறேன். உன்னுடைய குரல் என்னே இங்கே இழுத்து வந்துவிட்டது. கமலா : தங்களுடைய பாட்டின் மகிமையாலேயே நான் கடைத்தேறினேன். அவற்றைப் பாடுவதிலேயே பேரின்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. சுப்பிர (மெதுவாக) : நான் பாட்டெழுதவும், நீ அதைப் பாடவும் இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும். கமலா : நீங்கள் எங்கிருந்தாலும் நான் தங்கள் பாட்டுக் களை எப்பொழுதும் பாடிக்கொண்டிருப்பேன், சுவாமி.