பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 குற்றவாளி உள்ளே நுழைந்ததையும் அவசரமாக வெளியே வந்ததையும் நானும் பார்த்தேன். வாசு (கோபத்தோடு) : இப்படியெல்லாம் பேசி என் மேலே ஒரு அபாண்டமான கொலைக் குற்றத்தை எதற்காகச் சாட்டுகிருய் ? ராகவன் : நான் குற்றம் சாட்டவில்லை. நடந்ததைத் தான் சொல்லுகிறேன். உங்கள் குற்றத்தை நிரூபிக்க என்னிடத்திலே சந்தேகிக்க முடியாத அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி உங்களுக்குத் தெளிவுபடுத்தவே நான் வந்தேன். வாசு (ஆத்திரத்தோடு) ; நீ யார்? உனக்கு இதிலே என்ன சம்பந்தம்? ராகவன் (நிதானமாக) : என் மனைவியைக் கொலை செய்தவரைப் பிடித்துத் தருவதற்கு எனக்குச் சம்பந்தமில்லையா ? வாசு : யார்...... நீயா ராகவன் ? ராகவன் : ஆமாம்-நான் ராகவன்தான். மூன்று வருஷங் களுக்குப் பிறகு இன்றுதான் என் மனைவியைத் தேடி வீட்டை நோக்கி வந்தேன். வந்தவன் அவளுடைய பிணத்தைத்தான் கண்டேன். வாசு (சற்று அமைதியுடன்) . உங்களோடு சமாதானம் செய்து கொள்ளவே சரோஜினி என் உதவியை நாடினுள். ராகவன் : அதைப்பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு இப்பொழுது நேரமில்லை. உங்களுக்குள் என்ன சம்பந்தம் என்று ஆராய்ச்சி செய்ய நான் வாவில்லை. காரியம் மிஞ்சிப் போய்விட்டது. என்