பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இளந்துறவி எந்த ஊரிலும் சில நாட்களுக்குமேல் தங்குவதில்லை. ஆளுல், உனது குரல் எனக்குச் சோதனையாக எப்படியோ ஏற்பட்டுவிட்டது. அதற்கு என்னல் தப்ப முடியவில்லை. அதிலேயே தோல்வியும் அடைந்தேன். கமலா : சுவாமி, நாட்டை விட்டுக் காட்டிற்குச் சென்று மனதைப் பக்குவதப்படுத்துவது எளிது. நாட்டி லேயே அந்தப் பக்குவம் ஏற்பட வேண்டுமானல் உறுதியும் கவனமும் அதிகம் வேண்டும். இவை யெல்லாம் தங்களுக்குத் தெரியாததல்ல. சுப்பிர : நான் வெறும் புத்தகப் படிப்பில் அதைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். நீ ஆழ்ந்த சிந்தனை யாலும், உள் ளத் தி ற் குள்ளே ஊடுருவிப் பார்த்தும் அறிந்துகொண்டிருக்கிருய். உண்மையில் நீயே எனக்குக் குருவாக இருக்கத் தகுதியுடையவள். கமலா : சுவாமி, தாங்கள் அவ்வாறு சொல்லக்கூடாது. சுப்பிர நீ எதற்காக அன்றிரவு நான் பாடி முடித்ததும் பாடத் தொடங்கினய் ? கமலா : இளம் வயதிலேயே உலகத்தைத் துறந்த உங்களால் நானும் அந்த வழியிலே நின்று இறைவ னிடம் மனதை நிறுத்த முற்பட்டிருக்கிறேன் என் பதைத் தெரியப்படுத்துவதற்காகத்தான். அதை யறிந்து தாங்கள் மகிழ்ச்சியடைவீரென்றல்லவா நினைத்தேன். சுப்பிர : ஆல்ை, ஏன் அந்தப் பாட்டைப் பாடினய் 2