பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 15 ஆலோசனையைக் கேட்டால் நீங்கள் தப்பலாம். இல்லாவிட்டால் நான் நேராகப் போலீசுக்குப் போகிறேன். வாசு (சமாதானப் படுத்தும் பாவனையில்) : ராகவன், இந்தக் கொலைக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை. ராகவன் (கண்டிப்பாக) . மறுபடியும் இந்தப் பேச்சு வேண்டாம். எனக்கு நேரமாகிறது. நான் சொல்லு கிறபடி நடக்கச் சம்மதமா? வாசு இப்பொழுது என்ன செய்யச் சொல்லுகிறீர்? ராகவன் : நீங்கள் சுட்டுக் கொன்றதற்கு இரண்டு முக்கிய மான அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்கள் கடிதம் ஒன்று, மற்ருென்று உங்கள் கைத் துப்பாக்கி. அவை இரண்டையும் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன். என்னுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்யவேண்டும். வாசு : என்ன உங்கள் விருப்பம் ? ராகவன் : எனக்கு இருபதாயிரம் ரூபாய் ரொக்கமாகக் கொடுக்கவேண்டும். வாசு : இது அநியாயம். நான் செய்யாத ஒரு குற்றத்தை என்மேல் சுமத்துவதோடல்லாமல் அதற்காக இவ்வளவு பெரிய தொகை கேட்பதும் சரியல்ல. ராகவன் : நான் விஷயத்தை விளக்கிவிட்டேன். நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டுமாளுல் என் ஆலோ சனைப்படி நடக்கவேண்டும். வாசு : இல்லாவிட்டால்... ? ராகவன் ; போலீசில் பிராது கொடுப்பேன். பிறகு நீங்கள் தப்பமுடியாது. பணம் கொடுத்தால் நான்