பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 குற்றவாளி இன்றே மறுபடியும் வெளியூர் சென்றுவிடுவேன். கடிதமும் துப்பாக்கியும் உங்கள் கைக்கு வந்துவிடும். வாசு என்னைப் பயமுறுத்திப் பணம் பிடுங்க முயற்சி செய்கிறீர்கள். நான் இதற்குச் சம்மதிக்கமாட்டேன் என்ன வந்தாலும் சரி. ராகவன் சரி. அது உங்களிஷ்டம். தப்பிக்க வழி சொன் னேன். அதை ஏற்றுக் கொள்ள இஷ்டமில்லா விட்டால் வருகிறதை அனுபவித்துக் கொள்ளுங்கள். நான் புறப்படுகிறேன், வணக்கம். [ராகவன் வெளியேபோக அடியெடுத்து வைக்கிருன். மாலதி அவசரமாக வருகிருள்.1 மாலதி : ராகவன், கொஞ்சம் நில்லுங்கள். நீங்கள் சொன்னதையெல்லாம் நான் கேட்டுக்கொண்டு தானிருந்தேன். கொஞ்சம் நில்லுங்கள். வாசு அவரை எதற்கு நிற்கச் கொல்லுகிருய் ? மாலதி : அவர் கேட்கிறபடி பணத்தைக் கொடுத்து விடுங்கள். ராகவன், பத்தாயிரத்துக்கு நீங்கள் சம்மதிக்க வேணும். அந்தத் தொகையை உடனே கொடுக்க முடியும். வாசு (கோபத்தோடு) . அது முடியாது. இந்த அநியா யத்திற்கு நான் உடன்பட மாட்டேன். மாலதி (கவலையோடு) : அநியாயமோ என்னவோ, இப்பொழுது தப்பிக்க வழி பாருங்கள். ராகவன் : வாசுதேவன், உங்கள் மனைவி சொல்லுவதை நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்-நான் இன்னும் சற்று நேரத்தில் இங்கே வருகிறேன். அப்பொழுது