பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குற்றவாளி மாலதி : அவர் ஆறுமணிக்குத்தானே வருவார்? எதற்கும் நான் போய்ப் பார்த்து வருகிறேன். |மாலதி வெளியே போகிருள். வாசுதேவன் கவலை யோடு அறையில் உலாவுகிருன். சற்று நேரத் தில் மாவதியும் சரோஜினியும் வருகிருர்கள். சரோஜினி இளவயதுள்ள நாகரிக மங்கை.) வாசு (ஆச்சரியத்தோடு) . சரோஜினியா இது? நீ எப்படி வந்தாய்? சரோஜினி . ஏன், நான் வந்ததிலே உங்களுக்கு என்ன ஆச்சரியம் ? மாலதி : இவரைப்பற்றித்தனே அவர் சொன்னர்? சரோஜினி : ஆமாம், என்னைப்பற்றித்தான் என் கணவர் சொல்லியிருப்பார். வாசு : இப்போ ராகவன் எங்கே? சரோஜினி எனக்கெப்படித் தெரியும்? நான் உங்களிடம் ஒரு உதவியை நாடி வந்தால் எனக்கே நீங்கள் தீமை செய்துவிட்டீர்கள். வாசு : நான் என்ன செய்தேன்...எனக்கு ஒன்றுமே புரியவில்லையே? சரோஜினி என் கணவர். எப்பொழுதுமே சந்தேகம் உடையவர். என்மீது சந்தேகங் கொண்டுதான் என்னைவிட்டுப் பிரிந்து இவ்வளவு காலமாக எங்கேயோ போய்விட்டார். அவருக்குள்ள சந்தே கத்தைப் போக்கி, எங்களே ஒன்று சேர்க்க வேண்டு மென்றுதான் நான் உங்கள் உதவியை நாடினேன். மாலதி : இவர் எப்படி உங்களுக்கு இந்த விஷயத்திலே உதவி செய்ய முடியும்?