பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 21 சரோஜினி : உங்கள் கணவர் நினைத்தால் அது முடிந் திருக்கும். இவர் மிகவும் நல்லவர் என்று எல்லோ ருக்கும் தெரியும். என் கணவரும் அறிவார். ஆதலால் இவர் வார்த்தையை அவர் ஏற்றுக்கொள் வார் என்றுதான் இவரைத் தேடி வந்தேன். கடை சியில் இவரே எனக்குத் தீமை செய்துவிட்டார். வாசு : நான் என்ன செய்துவிட்டேன்? உங்கள் வீட்டுக்கு ஒரு தடவை வந்ததைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தேன்? சரோஜினி : நமக்குள்ள ஏதோ தொடர்பு இருக்கிறதாகச் சற்று முன்னே அவர் உங்களிடம் சொன்னராம். நீங்கள் அதை மறுக்கவே இல்லையாம். அதனல் அவர் மறுபடியும் என்னைவிட்டுப் போகப் போகிரு.ர். அதை என்னிடம் சொல்லுவதற்காகத்தான் உங்கள் வீட்டிலிருந்து அவசரமாக வந்தாராம். வாசு : ராகவன் சொன்ன விஷயத்தை யெல்லாம் கேட்டபோது எனக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை. அதனுல் நான் என்ன பேசினேனென்று இப்பொழுது சொல்ல முடியாது. அவர் உங்கள் உயிருக்கே... சரோஜினி : எப்படிப் பார்த்தாலும் எனக்கு இனிமேல் வாழ்க்கையில்லை. நான் செய்த முயற்சியெல்லாம் பாழாய்விட்டது. வாசு . நான் அவரைச் சந்தித்து உண்மையை நன்ருக விளக்கிச் சொல்கிறேன். நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சரோஜினி இனிமேல் நீங்கள் சொல்ல முடியாது; சொன் லுைம் அதல்ை எவ்விதமான பிரயோசனமும் 2