பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 குற்றவாளி தேனல்லவா? பிறகு உன் வீட்டிற்கு வந்திருக்கிறேன இல்லையா என்று தெரிந்துகொள்ள அவன் வோன் பண்ணியிருக்கிருன். வாசு : அதெப்படி உனக்குத் தெரியும்? சோமு : எல்லாம் தெரியும். இதில் ஏதோ பெரிய சூழ்ச்சி இருக்கிறது. சரோஜினி உன்னிடம் சொன்ன தெல்லாம் உண்மையல்ல. மாலதி : எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நீங்கள் உஷாராக இருக்கவேணும். சோமு : வாசு, இப்பொழுது நாம் உடனே என் பங்களா வுக்குப் போகவேனும். வாசு : அங்கென்னடா வேலை ? பங்களாவைத்தான் இழுத்துப் பூட்டிவிட்டு வந்திருப்பாயே? ராகவன் அதைத் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டான். சோமு : உனக்கு விஷயம் அப்புறம் சொல்லுகிறேன். உடனே புறப்படு. அவசியமாகுல் போலீசுக்கும் தகவல் கொடுக்கவேண்டும். வாசு : அந்த ராகவன் இங்கே வருவதாகச் சொல்லி விட்டுப் போயிருக்கிருனே ? சோமு : அவன் இனி இங்கு வரமாட்டான். அவன் முதலில் போட்டிருந்த திட்டம் தவறிவிட்டது. வாசு (அலட்சியமாக) : என்னடா, பெரிய துப்பறியும் நிபுணனைப் போலப் பேசுகிருயே ? அவன் திட்டம் எப்படித் தவறிவிட்டது? மாலதிதான் பத்தாயிரம் கொடுக்கத் தயாராக இருக்கிருளே ?