பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 27 சோமு : சரோஜினி உயிரோடிருக்கிற விஷயம் உனக்குத் தெரிந்த பிறகு பணம் கிடைக்குமென்று நினைக்க ராகவன் அத்தனை முட்டாள் அல்ல. மாலதி : சரோஜினி திடீரென்று இங்கு வரமாட்டாள் என்று அவன் திட்டம் போட்டான ? சோமு : அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. அவன் எதிர்பார்த்தபடி இந்தத் தடவையும் அவள் வீட்டிற் குள்ளே அழுதுகொண்டு கிடக்கவில்லை. அதனுலே அவன் சூழ்ச்சி பலிக்கவில்லை. வாசு : சோமு, நீ பிறந்ததும் ஷெர்லக் ஹோம்ஸ் இறந்து போய்ட்டான் தெரியுமா ? நீ இருக்கிற போது அவனுக்கு... சோமு இல்லை இல்லை, நீ பிறந்தபோதே அவன் தற் கொலை செய்து கொண்டான். அதுதான் உண்மை. இப்படி முட்டாள்கள் பிறந்திருக்கிறபோது தன் னுடைய துப்பறியும் திறமையெல்லாம் இருந்தாலும் பிரயோஜனமில்லையென்று அவனுக்குத் தெரியும். மாலதி : இந்த வாக்குவாதத்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாமே ? இப்போ ஆகவேண்டிய காரியத் தைக் கவனியுங்கள். சோமு : இனி ராகவனுடைய வேலை இங்கில்லை. அநேக மாக என் பங்களாவில்தான் நடக்கும். வாசு : ஏண்டா, உனக்கும் அவனுக்கும் என்னடா சம்பந்தம் ? சோமு : உனக்கும் அவனுக்கும் எப்படிச் சம்பந்தம் வந்தது ? வாசு : அப்போ, சரோஜினியை உனக்குத் தெரியுமா ? நீயும் அவளுக்காகச் சிபார்சுக்குப் போயிருக்கிருயா?