பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 குற்றவாளி மாலதி : சரி சரி, நீங்கள் சிபார்சுக்குப் போனதே போதும். இப்போ நடக்கவேண்டியதைக் கவனிக் காமல் வெட்டிப் பேச்சும் தர்க்கமும் எதற்கு ? வாசு : சரி வாடா, போவோம். மாலதி, இன்றைக்கு இதுவே பெரிய சினிமாவாகிவிட்டது. இந்தத் துப்பறியும் நிபுணரோடு நான் போய் வருகிறேன். நீ ஜாக்கிரதையாக இரு. சோமு : மாலதியைப்பற்றிக் கவலை இல்லை. நம்ப ரெண்டு பேரைப் பற்றித்தான் இப்போ கவலையெல்லாம். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வாசு : உனக்கென்னடா இதிலே சம்பந்தம் ? மறு படியும் உன்னையும் சேர்த்துப் பேசுகிருயே ? என் மேல்தான் கொலைக் குற்றம் சாட்டினர்கள் ? சோமு : உன்னோடு சிநேகமாக இருக்கிறேனே அது போதாதா ? அதெல்லாம் அப்புறம் பேசலாம். இப்போ நேரமில்லை, வா. அந்த சரோஜினி ஒரு பைத்தியம் - ராகவன் சொல்லுகிறபடியெல்லாம் செய்வாள். வாசு : மாலதி, ஏதாவது விஷயமென்ருல் சோமு பங்க ளாவுக்கு உடனே போன் பண்ணு. இப்போ கதவைத் தாள் போட்டுக்கொள். ஜாக்கிரதை. (இருவரும் போகிருர்கள்.) மாலதி நீங்கள் ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள். சோமு : மாலதி, வாசுவை நான் பார்த்துக் கொள் கிறேன். கவலைப்படாதே. (அவர்கள் வெளியே போனதும் மாலதி கவலையோடு கதவைத் தாளிடுகிருள். பிறகு உள்ளே நட மாடுகிருள்.1