பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குற்றவாளி பொழுது வாசுதேவனுக்குப் போன் செய்து அவரை யும் அவர் நண்பர் சோமசுந்தரத்தையும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாமல் தடுக்க வேண்டும். அதுவும் முக்கியமான நிபந்தனை. மாலதி : அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதற்குப் போகிருர்கள் ? ராகவன் : சோமசுந்தரத்தின் நோக்கம் எனக்குத் தெரியும். அவருடைய பங்களாவிற்கு இப்பொழுதே நீங்கள் போன் செய்யவேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் போதும். மாலதி (சந்தேகத்தோடு) சரி, நான் சம்மதிக்கிறேன். எப்படியும் என் கணவர் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட்டால் போதும். ஆனல் பணத்தை உங்களிடம் கொடுத்த பிறகு நீங்கள்........ ராகவன் : கடிதத்தையும், துப்பாக்கியையும் கொடுக்க மாட்டேனென்று சந்தேகமா ? கடிதத்தையும் துப்பாக்கியயையும் முதலில் உங்களிடம் கொடுத்து விடுகிறேன். பிறகு பணம் கொடுத்தால் போதும். உங்களை நான் நம்ப முடியும். நீங்கள் இந்தச் சமயத்தில் ஏமாற்றவும் முடியாது. பணம் கொடுத் ததும் வாசுதேவனுக்குப் போன் செய்யவேணும். மாலதி சரி, எங்கே கடிதமும், துப்பாக்கியும் ? ராகவன் : இதோ எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை உண்டு. துப்பாக்கி யிலிருந்த ஐந்து தோட்டாக்களில் ஒன்று காலியாகி விட்டது. மற்ற நான்கையும் நான் எடுத்துக் கொண்டு விட்டேன். தோட்டாக்களோடு மட்டும்