பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 குற்றவாளி கிருேமா அல்லது போய்விட்டோமா என்று பார்க்க இந்த யுக்தி எடுத்திருக்கிருன். வாசு : ஒருவேளை மாலதியாக இருந்தால்? அவளுக்கு ஏதாவது ஆபத்து... சோமு அவளுக்கு ஒன்றும் வராது. நாம் உடனே மாலதியைப் பார்க்கப் போவோம் வா. வாசு : அப்பா, இதைத்தாண்டா அப்போபிடிச்சு நான் செல்லுகிறேன். சோமு: இப்பொழுதுதான் எனக்கு எல்லாம் தெளிவாகத் தெரிகிறது. நாம் உன் வீட்டிலே இருப்பதுபோல நடிக்கவேண்டும். பின்புறத்துக் கொல்லை வழியாக அங்கிருந்து வெளியேறிப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கூட்டிக்கொண்டு மறுபடியும் இங்கே வரவேண்டும். வாசு மறுபடியும் இங்கேயா? சோமு: ஆமாம்; இங்கேயேதான். ஆனால் இந்த அறையில் அல்ல. அதோ அந்தச் சிறிய அறையில் நாம் ஒளிந் திருக்கப் போகிருேம். வாசு : என்னடா எனக்கு நீ சொல்வது ஒன்றுமே புரிய வில்லை. சோமு புரியாவிடடால் பரவாயில்லை. வா. உடனே காரியத்தில் இறங்குவோம். இல்லா விட்டால் சரோஜினியைக் காப்பாற்ற முடியாது. வாசு (திடுக்கிட்டு). சரோஜினியையா? மாலதி?... சோமு : அடே வாடா, மாலதியைத்தான் இப்போ பார்க்கப் போகிருேமேர்