பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 குற்றவாளி ராகவன் . அவனைப்பற்றி உனக்கென்ன கவலை? சரோஜினி : நாம் பங்களாவுக்குள் இருக்கும்போது ஒரு வேளே அவர் திரும்பி வந்துவிட்டால்? ராகவன் : அவன் இப்போது வரமாட்டான். ఢ లి; தேவன் வீட்டில்தான் இருப்டான். சரோஜினி : நாம் இரண்டு பேரும் உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது. ராகவன் : எதற்காக அப்படிப் பயப்படுகிருய்? சரோஜினி : நான் உயிரோடிருப்பதாக அவர்களுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் உங்கள்மேல்... ராகவன் : என்ன என்ன செய்ய முடியும்? சரோஜினி , மாலதியிடம் வாங்கிய பணம்? ராகவன் . அதைப்பற்றி வாசுதேவன் வெளியில் சொல் லவே விரும்ப மாட்டான். போலீசில் அவன் பிராது கொடுத்தால் அவனுடைய கெட்ட நடத்தை வெளியாகிவிடும். சரோஜினி (கெஞ்சிய குரலில்) : ராகவன், நான் சத்திய மாகச் சொல்லுகிறேன். வாசுதேவன் எவ்விதமான கெட்ட நடத்தையும் உடையவரல்ல. என்னைப் பற்றியும் நீங்கள் சந்தேகிக்கக் கூடாது. ராகவன் : பிறகு அவனுக்கு உன் வீட்டில் என்ன வேலை? இங்கே அவன் எதற்காக வந்தான்? சரோஜினி : நான்தான் அவர் உதவியை நாடினேன். அவரும் இன்றுதான் முதல் தடவையாக வீட்டிற்கு வந்தார்.