பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 39 ராகவன் . அவனிடம் உன் வரலாறெல்லாம் சொல்லி விட்டாயா? சரோஜினி : ஒன்றுமே சொல்லவில்லை. என்னை எப்படி யாவது உங்களோடு சேர்த்து வைக்க உதவவேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டேன். ராகவன் . பிறகு அந்தத் துப்பாக்கி எப்படி உன்னிடம் வந்தது? உங்களுக்குள் நெருங்கிய உறவில்லா விட்டால் கைத் துப்பாக்கியை அவன் உன்னிடம் கொடுப்பான? சரோஜினி : அவர் இங்கே வந்தபோது கைப் பெட்டியை அவசரத்திலே வைத்துவிட்டுப் போய்விட்டார். நான் அதைப்பற்றி அவருக்குத் தகவல் கொடுக்கப் போன தைத்தான் நீங்கள் வந்து தடுத்துவிட்டீர்கள். ராகவன் : அப்படி அவனுக்கு என்ன அவசரம் ? இதெல்லாம் க பட் டு க் க ைத. நான் நம்பவே மாட்டேன். சரோஜினி : என் வீட்டிற்கு வந்ததே அவருக்குப் பிடிக்க வில்லை என்று தெரிந்தது. அதனல் சீக்கிரமாகப் போய்விட்டார். ராகவன் : சோமசுந்தரம் விஷயம் அவனுக்குத் தெரியுமா? சரோஜினி : தெரியாதென்றுதான் எனக்குத் தோன்று கிறது. ராகவன் : எதேைல ? சரோஜினி : என்னுடன் பேசியதிலிருந்து எனக்குத் தெரிந்தது. அந்த விஷயம் தெரிந்திருந்தால் வாசு தேவனுடைய பேச்சிலேயே அது வெளிப்பட் டிருக்கும்.