பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 47 இன்ஸ் : சோமுவும் உங்களோடுதானே படித்தார் ? வாசு : படித்தாலும் அவன் போக்கே வேறு மாதிரி. எப்பொழுதுமே கிருக்கனைப் போலக் களுக் கண்டு கொண்டிருப்பான். (சோமு அவசரமாகவும் மகிழ்ச்சியோடும் பேசிக் கொண்டே நுழைகிருன்..! சோமு : டேய் வாசு, மாலதி ரொம்பக் கெட்டிக் காரியடா - உன்னைப் போல மக்கில்லை. வாசு : டெலிபோனில் இந்த உண்மை உதயமாச்சோ?... இதுவரையிலும் டெலிபோன் இப்படிச் சொல் வியதை நான் கேட்டதில்லை. சோமு : மாலதி என்ன சொல்லியிருக்கிருள் தெரியுமா ? வாசு : யாரிடத்திலே ? சோமு : அந்த ராகவனிடந்தான். வாசு (திடுக்கிட்டு) . மறுபடியுமா அவன் என் வீட்டிற்கு வந்தான் ? சோமு . வீட்டிற்கு வரவில்லை. போன் மூலம் பேசினனம். நாம் இரண்டு பேரும் எங்கே என்று தந்திரமாக விசாரித்திருக்கிருன். வாசு : மாலதி என்ன சொன்னுள் ? சோமு : உன் வீட்டிலே மேல் மாடியிலே வழக்கம் போல நாம் இரண்டு பேரும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்ப தாகச் சொல்லியிருக்கிருள். வாசு : எதற்கு அப்படிச் சொன்னுள் ? தனியாக இருப்ப தாகத் தெரியக் கூடாதென்று சொல்லியிருப்பாள்.