பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 5t தானே ? நாம் கலியாணம் செய்துகொண்ட பிறகு வேண்டுமானல் உங்களுக்கு உரிமையாகவே எழுதிக் கொடுத்துவிடுகிறேன். ராகவன் : நீ இப்படி ஒரு நிபந்தனையோடு காரியம் செய்கிருய். ஆனால், அவன் ஒரு நிபந்தனையு மில்லாமல் இந்தப் பங்களாவை உனக்கு எழுதிக் கொடுத்திருக்கிருன். இதில் ஏதோ விஷயம் இருக்க வேணும். சரோஜினி : ஒரு விஷயமும் இல்லை. நான் சத்தியமாகச் சொல்லுகிறேன். ராகவன் (அழுத்தமாக) . நான் இதை நம்ப முடியாது. எந்தப் பயித்தியக்காரனும் இப்படிச் செய்ய மாட்டான். நீ கூடச் செய்யவில்லையே ? சரோஜினி : எனக்குக்கூட முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நானும் நம்பவில்லே. பத்திரத்தைக் கையில் வாங்கிப் பார்த்த பிறகுதான் நம்பிக்கை ஏற் பட்டது. அப்பொழுதுதான் நான் அவரை ஒரளவு புரிந்துகொண்டேன். ராகவன் . அவனைக் கலியாணம் செய்துகொள்ள மறுத்து விட்டு அவனிடமிருந்தே எப்படி நீ இவ்வளவு பெரிய பங்களாவைச் சொந்தமாகப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தாய் ? சரோஜினி : நான் சம்மதிக்கவே இல்லை. ஆனால், அவர் வாழ்க்கையிலேயே வெறுப்படைந்து விட்டவர் போலக் காணப்பட்டார். இதையும் நான் அவர் விருப்பப்படி வாங்கிக்கொள்ள மறுத்து விட்டால்