பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 53 விடுவதாகவும் உன் வீட்டிலே எனக்கு எழுதிவைத் ததுபோல ஒரு சின்னக் கடிதம் எழுதவேண்டும். சரோஜினி (சந்தேகத்துடன்) : அப்படிக் கடிதம் எதற்கு? ராகவன் : அது எனக்கு வேண்டும்-காரணம் கேட்கக் கி.-Tது. சரோஜினி . சரி. பிறகு என்ன செய்யவேண்டும் ? ராகவன் : இதோ சோமசுந்தரத்தின் அங்கவஸ்திரம் இருக்கிறது. அதைக் கொண்டு உன் கைகளைப் பின்னல் கட்டிவைக்கிறேன். நீ கீழே தள்ளப் பட்டதுபோல், குப்புறக் கிடக்கவேண்டும்..பிறகு போலீசார் வரும்போது சோமசுந்தரம் பலவந்தம் செய்ததாக அவர்களிடம் சொல்லவேண்டும். அவ்வளவுதான். சரோஜினி (தயக்கமாக) : அவர் மேலே அப்படி எப்படிச் சொல்லுவது - அதனுல் நமக்கென்ன லாபம் ? அவர்...... ராகவன் (கண்டிப்பாக) . ஏன், உன் ஆசை நாயகனைக் காட்டிக் கொடுக்கப்படாதா ? சரோஜினி . இது பெரிய பாதகச் செயல். அவர் என் ஆசை நாயகனும் அல்ல. நீங்கள் விரும்புவது போலச் செய்தால் நாளேக்கு என் பெயர் ஊரெல்லாம் அடிபடும். அது உங்களுக்குச் சம்மதமா? ராகவன் என்ைேடு சேர்ந்து வாழ ஆசையிருந்தால் நீ இதற்கு இணங்கவேண்டும். சரோஜினி (இரங்கிய குரலில்) : ராகவன், கொஞ்சம் நிதானமாக யோசித்துப்பாருங்கள். நாம் கலியாணம் 4