பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/64

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் எங்கே? முதல் அங்கம் காட்சி ஒன்று Iலலிதாவின் மாளிகையில் நாகரிகமாக அலங்கரிக்கப் பட்ட ஒர் அறை. லலிதா தனியாக அமர்ந்து மெல்லிசை மெட்டிலே ஒரு பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிருள். நவநாகரிக மங்கை அவள்: வயது 22-க்கு மேல் இராது. ஆனல், தோற் றத்தில் சிறுமி போலவே காணப்படுகிருள். மாலை நேரம்.) லலிதா (பாட்டு) : பல்லவி ஆசையெல்லாம் அறியாயோ-என்றன் அன்பை யுணர்ந்து நீ செயல் புரியாயோ (ஆசை) அனுபல்லவி ஆசையினுல் உள்ளம் வெம்பித் துடித்துளேன் அல்லும் பகலும் நான் வாடியே நைந்துளேன் (ஆசை)