பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 67 பானுமதி : லலிதா...உன்னேடு தர்க்கம் செய்யறதுக்காக நான் வரவில்லை. உனக்குத் தகவல் கொடுக்காமல் திடீரென்று வந்து பார்க்க வேணுமென்றுதான் வந்தேன். அதனுல்தான் உனக்குக் கடிதங்கூட போடவில்லை. லலிதா : பானு, நான் என்னவோ என் மனப் போராட் டத்தையே நினைத்துப் பேசிக் கொண்டிருந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு. நாலு வருஷ்ம் கழித்து வந்த உனக்குக் காப்பிகூடக் கொடுக்காமல் பேசிக்கொண்டிருக்கிறேன். பானுமதி : காப்பிக்கு இப்போ என்ன அவசரம் ? அண்ணு எப்போ வருவார் ? லலிதா : பாங்க் 5 மணிக்கே முடியாகிவிடும். ஆனல், இவர் வேலையெல்லாம் முடித்துவிட்டு ஆறுமணிக்கோ ஏழு மணிக்கோதான் அங்கிருந்து புறப்படுவார். பானுமதி : ஆமாம், பாங்க் மானேஜர் என்ருல் பொறுப்பு அதிகமாக இருக்கும். அதிலும் இவர் தமது கடமை யைச் செய்வதிலே ரொம்பவும் கண்ணுங் கருத்து மாக இருப்பார். இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியும். இப்போ சம்பளம் எவ்வளவு ? லலிதா . ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆனல்...சம்பளம் இருந்து என்ன செய்கிறது ? (மீண்டும் பெருமூச்சு விடுகிருள்.) பானுமதி : இவரைப் போல நல்லவர் கிடைக்க வேணுமே -லலிதா நீ உண்மையிலேயே நல்ல பாக்கியம் செய்தவள். அதை உணராமல் என்னமோ குழப்பிக் கொண்டிருக்கவேண்டாம்.