பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 73 ஆக வேண்டும். பிறகு அவளும் பாடத் தொடங்கு வாள். லலிதா : அது உங்களுக்கு எப்படித் தெரியும்? சதாசிவம் : அதுதானே வழக்கம்? நான் வண்டு நீ செண்டு -என்று இப்படிக் காதலியும் காதலனும் மாறி மாறி உயிரை வாங்குவார்கள். பாட்டும் ஒட்டமும் ஆட்டமுமாக அமர்க்களமாக இருக்கும். லலிதா. (சற்றுக் கோபத்தோடு): சரி வாருங்கள். வீட்டுக் குப் போகலாம். பானு, பார்த்தாயா உன்.அண்ணன? இதைத்தான் உனக்கு எழுதினேன். பானுமதி : அண்ணன் சொன்னது சரிதானே? சதாசிவம் : நாளைக்கு அமைதியாக மறுபடியும் பேசு வோம்; இப்போ புறப்படுவோம். (போகிருர்கள்.) காட்சி மூன்று (லலிதாவின் மாளிகை. காலை பதினுெரு மணி. லலிதா ஏதோ ஒரு பாடல் வரியைப் பாடிக் கொண்டிருக்கிருள். யாரோ கூடத்தில் நிற்பதை அறிந்து சட்டென்று பாட்டை நிறுத்திப் பேசு கிருள். தாமோதரன் அங்கு வந்து நிற்கிருன், அவனுக்கு முப்பது வயதிருக்கலாம்.1 லலிதா : யாரங்கே? தாமோதரன் : மிஸ்டர் சதாசிவம் இருக்கிருரா? அவரைப் பார்த்து ஒரு விஷயம் கேட்க வந்தேன்.