பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 75 சங்கத்திலே அவரோடு நான் விவாதம் பண்ணலா மென்று ஆசைப்படுகிறேன். லலிதா : ரொம்ப நல்லது. ஆனல்...எங்கள் வீடு உங்க ளுக்கு எப்படித் தெரிந்தது? தாமோ : இவர் மானேஜராக இருக்கும் பாங்கில்தான் நான் வரவு செலவு வைத்துக் கொண்டிருக்கிறேன். தற்செயலாகப் பலமுறை அவரை நான் அங்கு பார்த்திருக்கிறேன். பாங்கிலிருந்துதான் விலாசம் தெரிந்துகொண்டேன். லலிதா : அப்படியா? சரி-அப்போ நாளைக்குக் காலை யிலே வாருங்கள். நானும் சொல்லி வைக்கிறேன். தாமோ : அவரை இன்றைக்குப் பார் க் க முடியா விட்டாலும் உங்களுடைய அற்புதமான பாடலேக் கேட்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதைப் பற்றிச் சொல்லாமலிருக்க முடியவில்லை. லலிதா (மகிழ்ச்சியோடு) : நான் என்ன அப்படி நன்முகப் பாடுகிறேன என்ன? தாமோ ! உங்களுடைய பாட்டின் இனிமையை அறி யாதவனுக்குக் காதே இல்லையென்றுதான் சொல்ல வேணும்...நான் முன்பின் தெரியாமல் இப்படியெல் லாம் பேசுவதைப்பற்றி நீங்கள் தவருக நினைக்கக் கூடாது. நான் ஒவியன், கலைஞன், கலையின் இனி மையை அனுபவிக்கின்றபோது அதைப்பற்றிப் பேசாமல் என்னுல் இருக்க முடியாது. லலிதா : நீங்கள் சொன்னதைப்பற்றி எனக்குக் கோப மில்லை. அப்போ நீங்கள் நாளேக்குக் கட்டாயமாக வாருங்கள்.