பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 77 பானுமதி : அண்ணு போனரா? லலிதா : ஆமாம்; நான் ரொம்ப வற்புறுத்தினேன். அதனுலேதான் எப்படியோ அரை மனதாகப் போனர். பானுமதி : அதுதானே கேட்டேன். உனக்காகப் போயிருப் பார். அந்த சங்கத்தை யார் நடத்துகிருர்கள்? லலிதா : தாமோதரன்னு ஒரு ஒவியர்-அவர் நல்ல ரசிகராக இருக்கிரு.ர். பானுமதி : ஒவியருக்கும் இந்தச் சங்கத்திற்கும் என்ன சம்பந்தம் லலிதா? லலிதா : என்ன சம்பந்தமா? நல்ல கேள்வி. அவர்தான் அதற்குக் காரியதரிசி. பானுமதி : சரி சரி...சென்னையில் இப்படி ஆயிரத்தெட்டு சங்கமிருக்கும். அவற்றை யெல்லாம் யாருக்குத் தெரியும்? இது எத்தனை காலமாக நடக்கிறதோ? யாரெல்லாம் அங்கத்தினர் என்ற விபரமெல்லாம் உனக்குத் தெரியுமா? லலிதா : அதைப்பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை? தாமோதரன் நல்ல ரசிகராக இருக்கிருர்-அது போதுமே? என்னைப் பாடச் சொல்லிக்கூட ரொம்ப வற்புறுத்தினர். பானுமதி : அண்ணு சம்மதித்தாரா? லலிதா எனக்கு இஷ்டமென்ருல் அவர் வேண்டான்னு சொல்லவே மாட்டார். பானுமதி சரி லலிதா, உன்னுடைய பாட்டைக் கேட்கிற துக்கு எனக்கும் இஷ்டம்தான் வருகிறேன்.