பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காதல் எங்கே ! லலிதா (சிரித்துக்கொண்டே) : பிரசங்கம் கேட்கிறதுக்கு இல்லையா? பானுமதி : கல்லூரியிலே படிக்கிறபோது எத்தனையோ தடவை உன் பிரசங்கத்தைக் கேடடிருக்கிறேனே? லலிதா : அதுவே போதுமென்று ஆய்விட்டதாக்கும்? பானுமதி : அப்படியில்லை லலிதா-இருந்தாலும் உன் னுடைய பாட்டுத்தான் எனக்கு ரொம்ப இஷ்டம். ஆமாம், ஏன் இப்பொழுதெல்லாம் மெல்லிசைப் பாடலாகவே பாடுகிருய்? அதுவும் நன்ருகத்தான் இருக்கிறது. லலிதா : மெல்லிசைதான் கவர்ச்சியாக இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தை யார் ரசிக்கிருர்கள்? என் பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டு பின்னலே பாடலாமென்றிருக்கிறேன். தாமோதரன் என்னு டைய பாட்டைக் கேட்க ரொம்ப ஆசைப்படுகிரு.ர். பானுமதி : கூட்டம் எத்தனை மணிக்கு? லலிதா : ஆறு மணிக்கு. நாம் கொஞ்சம் முன்னலேயே போக வேணும். தாமோதரன் சமீபத்தில் தீட்டிய ஒவியங்கள் சிலவற்றைக் காண்பிக்கிறதாகச் சொல்வி யிருக்கிரு.ர். பானுமதி : சரி, இதோ ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன். (உள்ளே போகிருள்.1