பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் எங்கே ! 81 யைத் தெரிவித்துத்கொள்ளும் மகிழ்ச்சியான கடமை யைச் செய்ய நான் உங்கள் முன்னுல் நிற்கிறேன். பூரீமதி லலிதா அவர்களின் சொற்பொழிவிலே முற்போக்கான கருத்துக்கள் அற்புதமாக வெளி யானதை நாம் அனைவரும் கேட்டு மகிழ்ந்தோம். இவ்வளவு அருமையான கருத்துக்களே நான் இது வரையிலும் யாரிடத்திலும் கேட்டதிலலை என்று கூறும்போது நீங்களும் என்னுடன் சேர்ந்து ஆமோ திப்பீர்கள் என்று நம்புகிறேன். (கை தட்டல்). அன்பர்களே. பூரீமதி லலிதாவின் சொற்பொழிவுக்கு ஒரு கிரீடம்போல அவருடைய இன்னிசை விருந்து அமைந்திருந்தது. (கைதட்டல்). கந்தர்வகானம், தேவகானம், அமுதகானம் என்றெல்லாம் இது வரையில் பேசக் கேட்டிருக்கிருேம், பாடக் கேட்ட தில்லை. ஆனல் அந்த அமுத கானத்தைக் கேட்கும் பாக்யம் இன்று நமக்குக் கிடைத்தது. (கைதட்டல்). இந்தக் கானத்தினல் நமது சங்கமே கந்தர்வ லோக மாக மாறிவிட்டது. பூரீமதி லலிதாவுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியாமல் தடுமாறிக்கொண் டிருக்கிறேன். இப்படித் தடுமாறிக் கொண்டிருக்கும் எனது உணர்ச்சிப் பெருக்கத்தையே எனது நன்றி யாக ஏற்றுக் கொள்ளும்படியும் அவரைக் கேட்டுக் கொள்ளுகிறேன். (பலத்த கைதட்டல். கூட்டம் கலையத் தொடங்கு கிறது.)