பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& o காட்சி ஆறு (லலிதாவின் மாளிகை. லலிதாவும் பானுமதியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிரு.ர்கள். இரவு எட்டு மணி.) லலிதா : பானு தாமோதரன் ரொம்ப அழகாகப் பேசு கிருர்-இல்லையா? பானுமதி : அபாராமாகப் புகழ்ச்சி பாடுகிரு.ர். லலிதா : அவர் கலைஞரல்லவா? அவருடைய உள்ளத்தி லிருந்து உணர்ச்சிகளெல்லாம் அப்படி வெளி யாகிறது. பானுமதி : எனக்கென்னவோ அது உண்மை உணர்ச்சி யாகவே படவில்லை. அவர் பேச்சே ஏதோ மேல் பூச்சு மாதிரி தொனித்தது. லலிதா : நான் அப்படி நினைக்கவில்லை. பானுமதி உனக்குத்தான் இப்படிப் பேச்சிருந்தால் அதுவே திருப்தி-உள்ளத்திலே இருப்பதைப்பற்றி உனக்குக் கவலை ஏது ? லலிதா : பானு, நீ உன் அண்ணுவுடைய வாதத்தை ஆரம்பித்துவிடாதே. அது கிடக்கட்டும்-தாமோ தரன் திட்டியிருக்கும் ஒவியங்களைப் பற்றி என்ன நினைக்கிருய் ? பானுமதி : எனக்கு அது ஒன்றுமே விளங்கவில்லை. உருவத்தையே காணுேம்-தாறுமாருக என்னவோ கிறுக்கியிருக்கிறது. லலிதா (சிரித்துக்கொண்டே) : பானு, உனக்கு இந்தக் காலத்து நவீன ஓவிய மரபெல்லாம் ஒன்றுமே தெரியாது போலிருக்கிறது.