பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 83 பானுமதி : எனக்குத் தெரியவே வேண்டாம்-இதுதான் ஒவியமென்ருல் யார் வேண்டுமானலும் ஒவியராகி விடலாம். தாமோதரன்கூட இப்படித்தான் ஒவிய ராகி இருக்கிருர் போலிருக்கிறது. லலிதா நவீன ஓவியம் கலையுலகத்திலே ஒரு புதிய யுகத்தையே ஆரம்பிக்கப் போகிறதென்று நான் நினைக்கிறேன். பானுமதி : லலிதா, நீ உண்மையாகத்தான் பேசுகிருயா அல்லது ஏதோ மயக்கத்திலே இருக்கிருயா ? லலிதா : ஏன் அப்படிக் கேட்கிருய் ? பானுமதி : நவீன ஒவிய மரபைப் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும். அந்த மரபின் பேரைச் சொல்லிக்கொண்டு வேஷம் போடுகிறவர்களையும் எனக்குத் தெரியும். தாமோதரனுடைய படங்களிலே ஒரு மண்ணும் கிடையாது. அவருக்கு ஒவியத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதென்று அவர் விளக்கம் கூறும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. லலிதா : நவீனப் புது மரபுக் கலைகளேப் பற்றி உன்னைப் போல இப்படிப் பேசுகிறவர்களும் உண்டு என்று எனக்குத் தெரியும். பானுமதி அது வாஸ்தவந்தான் லலிதா-புது மரபைப் பற்றி மாருன கருத்துக்கள் உண்டுதான். ஆனால், புது மரபின் பெயரைச் சொல்லித் திரியும் போலியை நீ அறியவில்லை என்பதுதான் என்னுடைய அபிப் பிராயம். |சதாசிவம் வருகிருன்.) சதாசிவம் : என்ன பானுமதி, ரொம்ப சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்களே ?